ட்ரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டைதேவையான பொருட்கள்

அத்திப்பழம் - 5, பேரீச்சம்பழம் - 5, உலர் திராட்சை - 2 டீஸ்பூன், ஓட்ஸ் - 1/4 கப், அரிசி மாவு - 1/4 கப், வெல்லம் - 1/2 கப், தண்ணீர் - 1 கப், தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி -  1/4 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை

ஓட்ஸை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். உலர் பழங்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வெல்லத்தை 1 கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய வெல்லத் தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் வறுத்த ஓட்ஸ், அரிசி மாவு சேர்த்துக் கிளறவும்.

சட்டியில் ஒட்டாமல் வரும் சமயம் நெய் சேர்த்து கிளறவும். கடைசியாக துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி, நறுக்கிய உலர் பழங்கள் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். ஆறியவுடன் கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். மோல்டில் வைத்தும் கொழுக்கட்டைகளாகச் செய்யலாம்.