கேரட் அல்வா



தேவையான பொருட்கள்

துருவிய கேரட் - 2 கப், நெய் - 3 டேபிள் ஸ்பூன், மில்க் மெய்ட் - 4 கப், சீனி - 4 டேபிள் ஸ்பூன், பால் - 100 மிலி, முந்திரி, கிஸ்மிஸ் - தலா 10, ஏலக்காய் பொடி -  1/4 டீஸ்பூன்.

செய்முறை

கேரட்டை தோல் சீவி நைசாகத் துருவிக்கொள்ளவும். ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி, கிஸ்மிஸ்ஸை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் கேரட்டை சேர்த்து வதக்கவும். கேரட் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். பின் மில்க் மெய்ட், பால் சேர்த்து நன்கு கிளறவும். கேரட் நன்கு வெந்து சுருண்டு வரும் சமயம் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.