பருப்பு பாயசம்



தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/2 கப், வெல்லம் -  1/2 கப், தேங்காய்ப்பால் - 1/2 கப், ஏலக்காய் பொடி -  1/4 டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - தேவைக்கு.

செய்முறை

பாசிப்பருப்பை மணம் வரும் வரை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்புடன் 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் சத்தம் வரை வேக வைத்துக் கொள்ளவும். வேக வைத்ததை நன்கு மசித்துக் கொள்ளவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். வெல்லக்கரைசலை வெந்த பருப்பில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.

நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் போடவும். ஏலக்காய் பொடியை சேர்த்து கலந்து விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். தேங்காய்ப்பால் கொதித்தால் திரிந்து விடும்.