ஓட்ஸ் பாயசம்



தேவையான பொருட்கள்

ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன், பால் - 1 கப், பாதாம் பொடி - 2 டீஸ்பூன், சீனி - 4 டேபிள் ஸ்பூன், முந்திரி - 10, குங்குமப்பூ - சிறிது, நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை.

செய்முறை

முந்திரியை சிறு சிறு துண்டுகளாக ஒடித்து நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அதே நெய்யில் ஓட்ஸை அதிக நேரம் வறுக்கவும். பின் பால், தண்ணீர் 1 கப் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் பாதாம் பவுடர், சீனி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஓட்ஸை வேக வைக்கவும். இல்லைெயன்றால் அடி பிடித்து விடும். சீனி கரைந்தவுடன் முந்திரி, குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும். பாயசம் கெட்டியாகி விட்டால் சிறிது காய்ச்சிய பால் சேர்த்து கலந்துகொள்ளவும்.