தாமரை விதை பாயசம்



தேவையான பொருட்கள்

தாமரை விதை -  1/4 கப், பால் - 1/4 லிட்டர், சீனி - 1/4 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், கிஸ்மிஸ், முந்திரி - தலா 10, பாதாம், பிஸ்தா - தலா 6, குங்குமப்பூ - சிறிது, ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன், ஜாதிப்பூ - 1 சிட்டிகை.

செய்முறை

ஒரு பேனில் நெய்யை உருக்கி அதில் தாமரை விதைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். தாமரை விதை மொறு மொறுப்பாகும் வரை அடுப்பை குறைத்து வைத்து வறுத்துக் கொள்ளவும். அழுத்திப் பார்த்தால் உடைய வேண்டும். அதுவரை வறுக்கவும். பாதாம், பிஸ்தா, முந்திரியை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பால், சீனி, பொடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பொடி, ஏலக்காய் பொடி, ஜாதிப்பூ சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். இதில் வறுத்து வைத்துள்ள தாமரை விதைகளை  கைகளால் உடைத்துப் போடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.