கொழுக்கட்டை மாவு செய்முறைதேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ.

செய்முறை

பச்சரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடித்துவிட்டுத் துணியில் நிழலில் உலர விடவும். உலர்ந்தபின் மிஷினிலோ, மிக்ஸியிலோ அரைத்துக் கொள்ளவும். அரைத்ததை சலித்து சிறிது நேரம் ஒரு தட்டில் பரப்பி விடவும். பின் இந்த மாவை  கருகி விடாமல் வறுத்துக் கொள்ளவும்.

வறுத்ததை சலித்து ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டால், எப்பொழுது கொழுக்கட்டை தேவையோ அப்போது எடுத்துச் செய்து கொள்ளவும். தேவைப்படும்பொழுது ஒரு கப் அளவு மாவு எடுத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊற்றி பிசைந்து கொள்ளவும். கடைசியாக மாவு காயாமல் இருக்க சிறிது நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து கொள்ளவும்.