வரகு கேசரி



தேவையான பொருட்கள்

வரகு - 1/2 கப், சீனி - 3/4 கப், நெய் - 3 டேபிள் ஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் - தலா 10, தண்ணீர் - 2 கப், கேசரி கலர் - 2 சிட்டிகை, ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி உருக்கி, அதில் முந்திரி, கிஸ்மிஸ்ஸை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் வரகை வறுத்துக்கொண்டு ஆறியவுடன் மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த ரவையை ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும். கொதி வந்ததும் அடுப்பை குறைத்து பாத்திரத்தை மூடியால் மூடி வேக விடவும். இடை இடையே திறந்து கிளறி விடவும்.

தண்ணீர் போதவில்லை என்றால் சிறிது தண்ணீரை சுட வைத்து ஊற்றவும். நன்றாக வெந்தவுடன் கேசரி கலர், சீனி, மீதமுள்ள நெய் சேர்த்து கிளறவும். சீனி கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.