பால்கோவா மோதகம்



தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர், சீனி - 80 கிராம், ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன், குங்குமப்பூ - சிறிது, நெய் - சிறிது.

செய்முறை

பாலை நன்றாகக் காய்ச்சவும். பால் நன்றாக சுண்டி வந்ததும் சீனியைப் போட்டு கிளறவும். பால்கோவா பதம் வந்தவுடன் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். பால்கோவா ஆறியவுடன் கட்டிகள் இல்லாமல் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். மோதக மோல்டில் நெய்யை தடவி, பால்கோவாவை வைத்து, பால்கோவா மோதகங்களை தயாரிக்கவும். இந்த மோதகத்தை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே செய்து வைக்கலாம். இந்த மோதகம் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை நன்றாக இருக்கும்.