கம்பு அவல் கொழுக்கட்டை



தேவையான பொருட்கள்

கம்பு அவல் - 1 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, கடுகு - சிறிது, உளுத்தம் பருப்பு - சிறிது, பெருங்காயம் - சிறிது, தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை

கம்பு அவலை கழுவி அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை ஊறிய கம்பு அவலில் போட்டு, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.  பிசைந்த அவலை கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.