பேரீச்சம்பழ மோதகம்தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் - 20, முந்திரி - 20, பாதாம் - 20, பிஸ்தா - 20, நெய் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். பேரீச்சம்பழத்தின் விதையை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழ விழுது, அரைத்த பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும். மோதக அச்சில் சிறிது நெய்யைத் தடவி பேரீச்சம்பழ விழுதை வைத்து மோதகங்களாகச் செய்து எடுக்கவும்.