கொழு கொழு கொழுக்கட்டைபண்டிகையில் முதன்மையானது பிள்ளையார் சதுர்த்தி. பிள்ளையார் நம் வீட்டிற்கு வந்த பிறகு அடுத்தடுத்த பண்டிகைகள் வரிசையாக வர துவங்கிவிடும். பிள்ளையார் பண்டிகை என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடுவது கொழுக்கட்டைதான். எள்ளு, தேங்காய் பூரணம், கடலைப்பருப்பு பூரணம்னு நாம் விரும்பும் பூரணங்களை கொழுக்கட்டைக்குள் வைத்து பிள்ளை யாருக்கு படைக்கலாம்.

இந்த இதழில் தோழியர்களுக்காக பல விதமான கொழுக்கட்டை மற்றும் பலகாரங்களை செய்து அசத்தியுள்ளார் அன்னம் செந்தில்குமார். கணிதப்பட்டதாரியான இவர், சமையல் புத்தகங்கள் மற்றும் இணையம் வாயிலாக பல்வேறு சமையல் குறிப்பு களை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியிலும் வாரம் தோறும் இவரின் சமையல் நிகழ்ச்சி வெளியாகிறது. யுடியூபிலும் annams recepies, annams health recepies என்று சேனல்கள் நடத்தி வருகிறார். இவரின் ைக பக்குவத்தில் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பலகாரங்களை ருசியுங்கள்.