நெய் அப்பம்தேவையான பொருட்கள்

அரிசி மாவு  - 1/2 கப்,
வெல்லம் - 1/4 கப்,
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,
ஏலப்பொடி - சிறிது,
வாழைப்பழம் - 2 சிறியது,
உப்பு - 1 சிட்டிகை, பால் - 1/2 கப்,
நெய் - 1-2 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, தேங்காய் துருவல், ஏலப்பொடி, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். வாழைப்பழத்தை மசித்து மாவுடன் சேர்க்கவும். இக்கலவையை 2 மணி நேரம் ஊற வைத்து அதனுடன் பால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும். பிறகு குழிப்பணியார சட்டியில் நெய் விட்டு மாவை குழிகளில் நிரப்பி வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: இதே மாவை எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.