பட்டர் முறுக்குதேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 200 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
கடலை மாவு - 50 கிராம்,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் பொரிக்க - தேவையான அளவு.

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், வெண்ணெய், வெள்ளை எள், உப்பு ஆகிய அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து முறுக்குப் பிடியில் போட்டு எண்ணெயில் பிழிந்தெடுக்கவும். வாயில் போட்டால் கரையும் இந்த பட்டர் முறுக்கு.