மாலாடுதேவையான பொருட்கள்

பொட்டுக்கடலை - 1 கப்,
சர்க்கரை - 3/4 கப்,
நெய் - 1/4 கப்,
ஏலப்பொடி - சிறிது,
முந்திரி - 8.

செய்முறை

பொட்டுக்கடலையை லைட்டாக வறுத்து மிஷினில் அரைத்து, சர்க்கரையையும் அரைக்கவும். இரண்டையும் கலந்து வைக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து லட்டுவாக பிடிக்கவும். பிடிக்க வரவில்லையென்றால் மேலும் சிறிது நெய் சூடு செய்து ஊற்றிப் பிடிக்கவும். இந்த லட்டு மிகவும் சத்தானதும்கூட.