இனிப்பு சீப்பு சீடைதேவையான பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 2 கப்,
லேசாக வறுத்து அரைத்த பாசிப்பருப்பு - 1 கப்,
வெண்ணெய் (அ) வனஸ்பதி - 2 ஸ்பூன்,
தேங்காய்ப்பால் - தேவையான அளவு,
உப்பு - தேவைக்கு,
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 2-3 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு.

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றி பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு கோலி அளவு உருண்டைகளாக உருட்டி சீப்பு சீடை கட்டையிலோ அல்லது சீப்பிலோ தேய்த்து உருட்டி சீடைகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.