மனோகரம்தேவையான பொருட்கள்
 
அரிசி - 2 கப்,
உளுத்தம் பருப்பு - 1/2 கப்,
வெல்லம் - 2½ கப்,
எண்ணெய் பொரிப்பதற்கு - தேவையான அளவு,
ஏலப்பொடி - தேவைக்கேற்ப.

செய்முறை

அரிசியையும், உளுந்தையும் கலந்து மிஷினில் கொடுத்து அரைக்கவும். இதை சலித்து சிறிது காய்ச்சி எண்ணெயை ஊற்றி, கொஞ்சம் தண்ணீர் விட்டுப்பிசையவும். முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து ஒருபுறம் வெந்ததும் எடுத்து, இந்த முறுக்கைச் சின்னதாக நொறுக்கிக் கொள்ளவும். கெட்டியான வெல்லப்பாகு வைத்து, அதில் நொறுக்கின முறுக்கு, ஏலப்பொடி போட்டு நன்கு கலந்து உருண்டை பிடிக்கவும்.