அச்சுமுறுக்கு அல்லது ரோஸ் குக்கீஸ்தேவையான பொருட்கள்:

மைதா -  1/2 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
வெனிலா எெஸன்ஸ்,
ஏலப்பொடி - சிறிது,
பொடித்த சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் -
பொரிப்பதற்கு தேவையான அளவு,
தண்ணீர் - 1.4 கப்.

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள (எண்ணெயைத்தவிர) எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவுபோல் கரைத்துக்கொள்ளவும். அச்சுமுறுக்கு அச்சியை சூடான எண்ணெயில் போட்டெடுத்து மாவில் முக்கி மறுபடியும். எண்ணெயில் போடவும். முறுக்கு சிறிது நேரம் கழித்து அதுவாகவே பிரிந்து எண்ணெயில் மிதக்கும். சிவந்ததும் எடுத்து விடவும்.

குறிப்பு: ஒவ்வொரு முறையும் அச்சை எண்ணெயில் ேதாய்த்தெடுத்த பிறகே மாவில் முக்கணும்.