நிம்திதேவையான பொருட்கள்

மைதா - 1 கப்,
உப்பு - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்,
வனஸ்பதி(அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன்,
சாட் மசாலா - சிறிது,
மைதா - 1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை


மைதா, உப்பு, ஓமம், எண்ணெய் சேர்த்து மாவு பிசையவும். அதை சப்பாத்திப்போல் திரட்டி அதன்மேல் 2 டேபிள் ஸ்பூன் வனஸ்பதி, ஒரு டேபிள் ஸ்பூன் மைதா குழைத்த கலவையை பூசவும். அதன்மேல் சாட் மசாலா  தூவி பாய்போல் சுருட்டி சிறிது சிறிதாக வெட்டவும். வெட்டியதை சிறு சிறு பூரியாகத் திரட்டி முக்கோணமாக மடித்து ஒரு லவங்கத்தால் குத்தி மேலே Fork ஆல் சில ஓட்டைகள் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.