ஓமப்பொடிதேவையான பொருட்கள்

கடலை மாவு -1/2 கிலோ,
அரிசி மாவு - 1/4 கிலோ,
பெருங்காயத்தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கு,
ஓமம் - 25 கிராம் (தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும்).

செய்முறை


25 கிராம் ஓமத்தை ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். சுமார் 1 டம்ளர் ஓமத்தண்ணீர் போதும். மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை (ஓமம் தவிர) ஒன்று சேர்த்து ஓமம் தண்ணீர் விட்டு விட்டுப்பிசையவும். எண்ணெய் காய வைத்து பிசைந்த மாவை ஓமப்பொடி அச்சில் பிழியவும். அடுப்பை சிம்மில் வைத்து பிழியவும். அப்போதுதான் ஓமப்பொடி மேலாக கருகாது. ஒவ்வொரு முறையும் அச்சை கழுவி உபயோகித்தால் தட்டில் மாவு அடைப்பு இல்லாமல் இருக்கும்.