பட்டன் தட்டை (அ) மதுர் தட்டைதேவையான பொருட்கள்

வறுத்த ரவை - 1 கப்,
வறுத்த மைதா - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மிளகு, சீரகம் பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பூரி மாவுபோல் பிசைந்துகொள்ளவும். மாவிலிருந்து சின்னச் சின்ன கோலி அளவில் உருண்டைகளாக எடுத்து விரலால் அழுத்தி பட்டன் வடிவத்தில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.