பாம்பே லக்டி



தேவையான பொருட்கள்

மைதா - 1/2 - 3/4 கப்,
வனஸ்பதி - 1 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - 1 சிட்டிகை,
சர்க்கரை - 1/4 கப்,
தண்ணீர் பிசைய - தேவையான அளவு.

செய்முறை


ஆப்ப சோடாவுடன் வனஸ்பதி சேர்த்து நன்றாக குழைத்து அதனுடன் மைதா, சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு பூரி மாவுபோல் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு இன்ச் கனத்திற்கு தட்டி சதுரசதுரமாக வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.