ரவை ஃப்ரைடு பிஸ்கெட்



தேவையான பொருட்கள்

ரவை - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 8 டீஸ்பூன்,
ஏலப்பொடி அல்லது வெனிலா எஸென்ஸ் - சிறிது,
வறுத்த முந்திரி - சிறிது (பொடியாக நறுக்கியது),
உப்பு - 1 சிட்டிகை,
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
பால் - பிசைவதற்கு.

செய்முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து பால் விட்டு கெட்டியாக பிசைந்து இரண்டு நிமிடம் ஊற விட்டு சின்னச் சின்ன வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.