| பட்டர் சீடை
 
 
தேவையான பொருட்கள் 
 அரிசி மாவு - 1/2 கப்,
 வறுத்தரைத்த உளுந்து மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
 சூடாக்கிய வெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்,
 வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
 உப்பு - தேவைக்கு,
 எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு.
 
  செய்முறை
 
 மேற்கண்ட பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவாக பிசையவும். பின்னர் அதை சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
 
 
 |