காஜூ கேக்தேவையான பொருட்கள்

முந்திரி - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்,
நெய் - 150 கிராம்.

செய்முறை


முந்திரியை மைபோல் அரைத்து எடுக்கவும். வாணலியில் அரைத்த முந்திரியை சர்க்கரையுடன் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். இத்துடன் நெய்யையும் ஊற்றி கலவை மைசூர் பாகுபதம் வந்ததும் ட்ரேயில் ஊற்றவும். சூடு ஆறியதும் துண்டங்கள் போடவும்.