நாவை சுண்டி இழுக்கும் பலகாரங்கள்



பல நூற்றாண்டுகளாக நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்களை கொண்டாடி வருகிறோம். அதில் நாடு முழுதும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுதான் கிருஷ்ண ஜெயந்தி.

அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணை, பால், தயிர், பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். அன்று கிருஷ்ணர் பொம்மையை அலங்கரித்து அவரை நம் இல்லத்திற்கு வரவழைக்கும் விதமாக கால் பாதங்களை வரைந்து கொண்டாடுவது வழக்கம். இந்த இதழில் தோழியர்களுக்காக கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பலகாரங்களை செய்து அசத்தியுள்ளார் சசி மதன் அவர்கள். இல்லத்தரசியான இவருக்கு, சமையல் செய்வது என்றால் தனி விருப்பமாம். பலவிதமான உணவுகளை செய்வதில் எக்ஸ்பர்ட்டான இவரின் கைப்பக்குவத்தில் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பலகாரங்களை செய்து பண்டிகையை
கொண்டாடுங்கள்.

தொகுப்பு: ப்ரியா