காரக்கொழுக்கட்டை



தேவையான பொருட்கள்

பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப், நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உடைத்த உளுந்து - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - ஆய்ந்தது சிறிது, பெருங்காயம் - சிறிது.மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு, தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை கொதிக்க விட்டு உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து அரிசி மாவை சிறிது, சிறிதாக சேர்த்து கட்டித்தட்டாமல் கிளறவும். மாவு வெந்தவுடன் இறக்கி சிறு, சிறு உருண்டை கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்கள் போட்டு தாளித்து வெந்த கொழுக்கட்டை, தேங்காய் துருவல், சிறிது உப்பு சேர்த்து கிளறவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.