கோதுமை ரவை பாயசம்



தேவையான பொருட்கள்

கோதுமை ரவை - 1 கப், பால் - 3 கப், முந்திரி உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன், நெய் - சிறிது, தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை, ஏலக்காய் - 1 (உடைத்துக் கொள்ளவும்), சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை - 1/2 கப்.

செய்முறை

கோதுமை ரவையை நீர்விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, ஏலக்காய் போட்டு வறுக்கவும். பின்பு பால் விட்டு குறைந்த தணலில் அடுப்பை வைத்து சர்க்கரை சேர்த்து கிளறி, அது கரைந்ததும் வெந்த கோதுமை ரவைப் போட்டு கட்டித்தட்டாமல் கிளறி பச்சை கற்பூரம், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.