வெல்ல சீடைதேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்(பதப்படுத்தியது), வறுத்த உளுந்து மாவு - 1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய் - 25 கிராம், வெல்லம் துருகியது - 1/2 கப், தேங்காய்ப்பால் - மாவு பிசைய தேவையான அளவு, எண்ணெய் + நெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - 1 சிட்டிகை, ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு வாய் அகன்ற பேஷனில் அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.  தேங்காய்ப்பாலுடன், துருகிய வெல்லத்தை கரைத்து மாவில் ஊற்றி பதமாக சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு, சிறு உருண்டையாக உருட்டி சுத்தமான துணியில் பரப்பி 2-3 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். (ஈரப்பதத்தை துணி உறிஞ்சு கொள்ளும், வெடிக்காது சீடை) பிறகு வாணலியில் நெய் + எண்ணெய் சேர்த்து அடுப்பை பற்ற வைத்து, சூடானதும் வாணலி கொள்ளும் வரை சீடையைப் போட்டு மொறுமொறுப்பாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.