கார சீடைதேவையான பொருட்கள்

பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப், வெள்ளை எள் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு, நெய் - தேவைக்கு, பெருங்காயப் பவுடர் - 1 சிட்டிகை, சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் (மாவில் கலந்துகொள்ள), பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

வெறும் வாணலியில் அரிசி மாவை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக்கொண்டு பொட்டுக்கடலை மாவு கலந்து சலித்துக் கொள்ளவும். இதனுடன் உருக்கின நெய் சேர்த்து கைகளால் பிசறி விடவும். பெருங்காயத்தூள், உப்பு, எள்ளு, சூடான எண்ணெய் சேர்த்து தயிர் தெளித்து பதமாக பிசையவும்.

பிசைந்த மாவை சிறிய சிறிய உருண்டையாக அழுத்தம் கொடுக்காமல் உருட்டி எடுத்து சுத்தமான துணியில் 1 மணி நேரம் நிழலில் பரப்பி காய விடவும். மாவில் ஈரத்தன்மையை துணி உறிஞ்சு கொள்ளும். பிறகு சூடான எண்ணெயில் வாணலி கொள்ளும் வரை சீடையை போட்டு மொறு மொறுப்பாக பொரித்தெடுக்கவும்.