இனிப்பு அவல்தேவையான பொருட்கள்

கெட்டி அவல் - 1 கப், நாட்டுச்சர்க்கரை - 1/2 கப், தேங்காய் துருவல் -1/4 கப், டூட்டி - ஃபுரூட்டி - 1 டேபிள் ஸ்பூன், உலர் செர்ரி - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, முந்திரி - 1 டேபிள் ஸ்பூன், நெய் - 1 டேபிள் ஸ்பூன், சுக்கு பொடி - 1 சிட–்டிகை.

செய்முறை

நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு நீரை ஒட்ட பிழிந்து வைத்துக்கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரிப் போட்டு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஊறின அவல் மற்றும் அனைத்து பொருட்களையும் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.