அகத்திக்கீரை கறியமுது



தேவையான பொருட்கள்

அகத்திக்கீரை - 1 (ஆய்ந்தது)தாளிக்க:  காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உடைத்த உளுந்து - தலா 1/2 டீஸ்பூன், பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை

அகத்திக்கீரையைப் பொடியாக நறுக்கி, பாசிப்பருப்புடன் உப்பு சேர்த்து அதிகம் தண்ணீர் இல்லாமல் (தண்ணீர் தெளித்து) வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்கள் தாளித்து சீரகம் போட்டு, வெந்த கீரை+பருப்பை தண்ணீரை ஒட்ட வடித்து போட்டு பிரட்டி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி வைக்கவும். (உதிரி, உதிரியாக நன்கு வெந்து வதங்கி இருக்க வேண்டும் கீரை) வேண்டுமெனில் வெல்லம் அல்லது சர்க்கரை மிகச் சிறிய அளவு கடைசியாக சேர்த்து இறக்கி வைக்கலாம்.