மாவிளக்கு



தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப், துருகிய வெல்லம் - 1/2 கப், நெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை

அரிசியை அலசி நீரில் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நீரை வடித்து மிக்ஸியில் அரிசியை மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மாவைப் போட்டு, அதனுடன் துருகிய வெல்லம், நெய் சேர்த்து பிசிறி கலந்து பெரிய உருண்டையாக பிடிக்கவும். நடுவில் சிறிது குழி/பள்ளம் செய்து நெய்/பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றி வழிபடவும்.