துள்ளு மாவு



தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப், வெல்லத்துருவல் (அ) நாட்டு சர்க்கரை - 1 கப், ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

அரிசியை களைந்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து மிக்ஸியில் மாவாக அரைத்து எடுத்து சலித்துக் கொள்ளவும். இதனுடன் மற்றதை சேர்த்து கலந்துவிட வேண்டும்.