ஸ்பெஷல் தயிர் சாதம்தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப், வெண்ணெய் - 50 கிராம், உப்பு - தேவைக்கு, மல்லித்தழை - அலசி, ஆய்ந்தது - சிறிதளவு, கெட்டித்தயிர் புளிப்பில்லாதது - 1 கப், பால் (காய்ச்சி ஆறியது) - 1 கப், நெய்யில் வறுத்த முந்திரி - 1 டேபிள் ஸ்பூன். உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன்.
தாளிப்பதற்கு:  கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - தேவைக்கு, உடைத்த உளுந்து - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை ஆய்ந்தது - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, காய்ந்த மிளகாய் - 1.

செய்முறை

அரிசியை நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து குழைய வடித்து எடுத்துக் கொள்ளவும். பெரிய பேஷனில் கொட்டி சாதத்தை மத்தால் மசித்துக் கொள்ளவும். இதில் தயிர், பால், உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தளர்த்தியாக கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிர் சாதத்தில் கொட்டி கிளறி, மல்லித்தழை, முந்திரி தூவி பரிமாறவும்.