சர்க்கரைப் பொங்கல்



தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/4 கப், முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், பாகு வெல்லம் (உடைத்தது) - 1½ கப், நெய் - தேவைக்கு, உலர் திராட்சை - 1 ஸ்பூன், ஏலக்காய் - 2 (தட்டிக்கொள்ளவும்), பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை, ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை, தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

அரிசி, பருப்பை அலசி நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து குழைய குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்ல கரைசலை ஊற்றவும். (தண்ணீரில் வெல்லத்தை கரைத்து வடிகட்டினதை) நன்கு கொதித்து பாகு பதம் வந்ததும், குழைய வெந்த, சாதம், பருப்பை சேர்த்து நெய் சேர்த்து கிளறி ஏலக்காய், பச்சை கற்பூரம், ஜாதிக்காய் பொடி சேர்த்து தேங்காய் துருவல் தூவி இறக்கி, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை போட்டு கிளறி பரிமாறவும்.