பூரணக் கொழுக்கட்டை



தேவையான பொருட்கள்

கொழுக்கட்டை மாவு - 1 கப், (பதப்படுத்திய அரிசி மாவு), தேங்காய் துருவல் - 1/2 கப், ஏலக்காய் பொடி - சிறிது, பாகு வெல்லம் துருவல் - 1/2 கப், உப்பு - 1 சிட்டிகை, நல்லெண்ணெய் - சிறிது.

செய்முறை

தேவையான நீர் எடுத்துக்கொண்டு அடிகனமான பாத்திரத்தில் கொதிக்க விடவும். அதில் உப்பு, நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவும். மாவை சிறிது சிறிதாக சேர்த்து கை விடாமல், கட்டித்தட்டாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கி வைக்கவும்.

பூரணம் செய்ய: அடி கனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது நீர் விட்டு பாகு காய்ச்சவும். தேங்காய் துருவல், ஏலப்பொடி சேர்த்து கிளறி பூரணம் தயார் நிலை ஆனவுடன் அடுப்பை நிறுத்தவும். இனிப்பு தேங்காய் பூரணம் ரெடி. கொழுக்கட்டை மாவை எடுத்து, மோதக அச்சின் உள் எண்ணெய் தடவின பிறகு, மாவை வைத்து நடுவில் இனிப்பு பூரணம் வைத்து மூடி எடுத்து ஆவியில் இட்லி தட்டில் 10-15 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்பு: பிள்ளையார் சதுர்த்திக்கு உகந்தது.