ஜவ்வரிசி- முந்திரி பாயசம்



தேவையான பொருட்கள்

பால் - 1 கப், ஜவ்வரிசி (நைலான்) - 1/4 கப், நெய் - சிறிது, முந்திரி பருப்பு உடைத்தது - 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (உடைத்துக் கொள்ளவும்), சர்க்கரை - 1/4 கப், குங்குமப்பூ - 1 சிட்டிகை.

செய்முறை

நீரில் ஜவ்வரிசியை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதி வந்ததும், குறைந்த தணலில் வைத்து சர்க்கரை சேர்த்து கிளறி, அது கரைந்ததும் ஊறின ஜவ்வரிசி போட்டு கிளறி வேக விடவும். வெந்ததும் அடுப்பை நிறுத்தி, மற்றொரு கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, ஏலக்காய் வறுத்து வெந்த ஜவ்வரிசி பாயசத்தில் கொட்டி கிளறி குங்குமப்பூ தூவி பரிமாறவும்.