கேரட் மிக்ஸ் பீட்ரூட் ரைஸ்



என்னென்ன தேவை?

துருவிய கேரட், பீட்ரூட் - தலா 1/2 கப்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மல்லித்தழை - சிறிது,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உதிரியாக வடித்த சாதம் - 1½ கப்,
உப்பு - தேவைக்கு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு, கறிவேப்பிலை, துருவிய கேரட், பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். பின்பு உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.