முளைக்கட்டிய பச்சைப்பயறு சாலட்என்னென்ன தேவை?

பச்சைப்பயறு - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2,
பெங்களூர் தக்காளி - 1/2,
மல்லித்தழை - சிறிது,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
துருவிய கேரட் - 50 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து பச்சைப்பயறை தனியே எடுத்து வைக்கவும். 2 முதல் 3 மணி நேரத்தில் பயறு முளைத்து விடும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, துருவிய கேரட்டைச் சேர்த்து வதக்கி, முளைக்கட்டிய பச்சைப்பயறைச் சேர்த்து வதக்கவும். உப்பு, மிளகுத்தூள் கலந்து, மல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.
குறிப்பு: வறுத்த பயரை ஊறபோட்டால் முளைக்கட்டாது. வறுக்காதப் பயரைப் பயன்படுத்தவும். கர்ப்பிணிகளுக்கு வதக்கிக் கொடுத்தால் கிருமிகள் தாக்காது. எளிதில் ஜீரணமாகும்.