கார்ன் சாலட்என்னென்ன தேவை?

வேகவைத்து உதிர்த்த சோள முத்துக்கள் - 1/2 கப்,
முற்றாத கேரட் - 1,
பெரிய வெங்காயம் - 1,
குடைமிளகாய் - 1/2,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
பெங்களூர் தக்காளி - 1, உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்களை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்கள், வேகவைத்த சோளம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு, மல்லித்தழை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: தோல் நீக்கிய சோளக் கருதைச் சில மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து அதன் முத்துக்களை உதிர்த்தால் எளிதில் உதிர்க்கலாம்.