ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்என்னென்ன தேவை?

நன்கு சிவப்பாக உள்ள ஸ்ட்ராபெர்ரி - 5-6,
தேன் - 2 டீஸ்பூன்,
காய்ச்சி ஆறிய பால் - 250 மி.லி.

எப்படிச் செய்வது?

கழுவி சுத்தம் செய்த ஸ்ட்ராபெர்ரியின் காம்பை நறுக்கிக் கொள்ளவும். சூடு ஆறிய பாலில் நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து நன்கு நுரை வரும்வரை அரைத்துக் கொள்ளவும். பிறகு தேன் கலந்து அப்படியே அல்லது ஜில்லென்று பரிமாறவும்.