மாதுளை ஸ்மூத்திஎன்னென்ன தேவை?

மாதுளை முத்துக்கள் - 1 கப்,
மாங்காய் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன்,
தேன் - 1 டேபிள்ஸ்பூன்,
புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

மாங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இத்துடன் மாதுளை முத்துக்கள், தயிர், தேன் சேர்த்து நன்கு மைய அரைத்து பரிமாறவும். புளிக்கும் முன்பே குடிக்கவும்.