முளைக்கட்டிய பயறு கட்லெட்என்னென்ன தேவை?

முளைக்கட்டிய பச்சைப்பயறு - 100 கிராம்,
உருளைக்கிழங்கு - 2,
கேரட் - 1, மிளகுத்தூள்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 30 கிராம்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
ரொட்டித்தூள் - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

பச்சைப்பயறு, உருளைக் கிழங்கு, கேரட்டை வேகவைத்து மூன்றையும் ஒன்றாக சேர்த்து மசித்துக் கொள்ளவும். அத னுடன் வெங்காயம், உப்பு, மிளகுத்தூள் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவத்தில் செய்து ரொட்டித்தூளில் நன்கு பிரட்டிக் கொள்ளவும். தோசைக்கல் அல்லது தவாவை சூடு செய்து கட்லெட் துண்டுகளை போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து கட்லெட்டுகளை சுட்டு எடுக்கவும். சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.