கோதுமை தோசை



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 200 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
நறுக்கிய மல்லித்தழை,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய், உப்பு,
தண்ணீர் - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 2,
அரிசி மாவு - 50 கிராம்,
சீரகம் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, அரிசி மாவை கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சீரகம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடு செய்து, கரைத்த மாவை ஒரு கரண்டி அளவு எடுத்து தோசையாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுத்து தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: கரைத்த கோதுமை மாவு கட்டி இல்லாமல் இருக்க, தண்ணீர் சேர்த்தவுடன் மிக்சியில் சேர்த்து ஒரு சுற்று ஓடவிட்டால் கட்டி வராது.