ராகி காரப்புட்டு



என்னென்ன தேவை?

ராகி மாவு - 200 கிராம்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
உப்பு - தேவைக்கு,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ராகி மாவு, உப்பு கலந்து 3 டேபிள்ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். இந்தக் கலவையை இட்லிப் பானையில் தண்ணீர் சேர்த்து, ராகி கலவையைத் தட்டில் வைத்து 10-15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். ராகி மாவு கொளகொளவென இல்லாமல் உதிரியாக இருக்க வேண்டும். வெந்த ராகி மாவை தனியே எடுத்து உதிர்த்து வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த ராகி மாவு கலவையை போட்டு கட்டியில்லாமல் நன்கு பிரட்டி இறக்கவும்.