ராகி அடை



என்னென்ன தேவை?

ராகி மாவு - 200 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்,
மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய், உப்பு,
தண்ணீர் - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 2,
நன்கு ஊறிய பாசிப்பயறு - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, நன்கு ஊறிய பாசிப்பயறு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை ஓரளவு கெட்டியாகக் கரைத்து கொள்ளவும். தோசைக் கல்லைச் சூடு செய்து, ராகி மாவை அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்