சாத்தே ப்ரக்கோலி மிக்ஸ்



என்னென்ன தேவை?

நறுக்கிய ப்ரக்கோலி - 200 கிராம்,
மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
குடைமிளகாய் - 1.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காய வைத்து சீரகம்,  வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய குடைமிளகாய், ப்ரக்கோலியைச் சேர்த்து வதக்கவும். காய்கள் அரைப்பதத்திற்கு வெந்ததும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி பரிமாறவும்.