நட்ஸ் மில்க் ஷேக்



என்னென்ன தேவை?

பாதாம் - 8-9,
பால் - 300 மி.லி.,
முந்திரி - 3,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
தேன் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாதாம், முந்திரியை 7-8 மணி நேரம் ஊறவைத்து, பாதாம் தோலை உறித்துக் கொள்ளவும். இரண்டையும் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த விழுது, பால், ஏலக்காய்த்தூள் கலந்து சுண்ட காய்ச்சவும். 300 மி.லி. பால் 200 மி.லி. அளவிற்கு வந்ததும் இறக்கி ஓரளவு சூடு ஆறியதும் தேன் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: பிஸ்தா, ஆப்ரிகாட், வால்நட்டைச் சேர்த்தும் மில்க் ஷேக் செய்யலாம்.