பாசிப்பயறு ஆம்லெட்



என்னென்ன தேவை?

பாசிப்பயறு - 200 கிராம்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
பெங்களூர் தக்காளி - 1/2,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
காய்ந்தமிளகாய் - 2,
பூண்டு - 3 பல்,
சீரகம் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாசிப்பயறை 2 மணி நேரம் ஊறவைத்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தக்காளி, காய்ந்தமிளகாய், பூண்டு சேர்த்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பயறு கலவை, வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம் கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கவும். தோசைக் கல்லைச் சூடு செய்து, அரைத்த பாசிப்பயறு கலவையை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு ஆம்லெட்டைச் சுட்டு எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் துருவிய கேரட் அல்லது பீட்ரூட்டை பாசிப்பயறு மாவில் கலந்தும் செய்யலாம்.