பசலைக்கீரை சப்பாத்திஎன்னென்ன தேவை?

கோதுமை மாவு - 2 கப்,
புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
பசலைக்கீரை - 1 கப்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி - 1/2 இன்ச் அளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
மல்லித்தழை - 50 கிராம்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

இஞ்சி, பூண்டு, பச்சை மிள காயை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரை, மல்லித்தழை, தயிர், அரைத்த இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது, பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து கலந்து, கோதுமை மாவைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கீரை, தயிரில் உள்ள தண்ணீர் பதமே போதுமானது. கையில் மாவு ஒட்டாதவாறு பிசைந்து  கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக திரட்டிக் கொள்ளவும். தோசைக்கல்லைச் சூடு செய்து சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சப்பாத்தியை சுட்டெடுத்து சூடாக பரிமாறவும்.